Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ஊரடங்கை மீறி கறிவிருந்து - அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை துரத்தும் புதுவை காவல்துறை

ஊரடங்கை மீறி கறிவிருந்து – அரசு ஊழியர்கள் உட்பட 14 பேரை துரத்தும் புதுவை காவல்துறை

கொரோனா அபாயத்தை முன்னிட்டு இந்தியா முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசில் வனத்துறையில் ஒட்டுனராக பணிபுரியும் கல்யாணசுந்தரம் மற்றும் கால்நடை மருத்துவமனை உதவியாளர் கிருஷ்ணராஜ். மேற்கண்ட இருவரும் அயல்பணியில் (Deputation) புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை அமைச்சரின் உதவியாளராக பணியாற்றி வருகின்றனர்.

இவ்விரு அரசு ஊழியர்களும் 23.04.2020 அன்று மதியம் சுமார் 1.00மணியளவில் வில்லியனூர் காவல் எல்லைக்கு உட்பட்ட மணவெளி திருக்காஞ்சி சாலையில் அரசின் 144தடை உத்தரவை மதிக்காமல், தங்களுடன் 12 பேரை  ஒரே இடத்தில் கூட்டி சமூக இடைவெளியின்றி கறிவிருந்து சாப்பிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து புதுச்சேரி காவல்துறையினர் சம்மந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான 14 பேரையும் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments