கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது.
மாநிலத்தில் மும்பை, தாராவி மற்றும் புனே போன்ற பகுதிகளில் பாதிப்பு அவ்வப்போது பதிவாகி கொண்டிருக்கிறது. தமிழர்கள் அதிகமான பகுதிகளில் தாராவியும் ஒன்று. மேலும் தாராவியில் குடிசை பகுதி வாழ் மக்கள் தான் பெரும்பாலானவர்கள் வசிக்கின்றனர். குடிசை பகுதிகளில் நோய் பரவும் அபாயம் அதிகமாக இருப்பதால் அங்கு ஹைட்ரோ குளோரோகுயினை கொடுப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, தொற்று அதிகரித்து பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது. தாராவியில் கொரோனாவால் 330 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று (ஏப்.,29) புதிதாக தாராவியில் 14 பேர் கொரோனாவால் தாக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.