கொரோனாவை அடியோடு அழிக்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா, ஹெச்.ஐ.வி. வைரஸ் போல தொடர்ந்து உயிர்ப்புடன் இருக்கும். கொரோனா எப்போது அழியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. கொரோனா நீண்டகாலம் பிரச்சனையை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமலும் போகலாம். கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், வலிமையான ஒன்றை உறுதி செய்வது கடினமாக உள்ளது. அனைத்து நாடுகளுமே அதிகபட்ச கண்காணிப்பு நிலையை கடைபிடிப்பதுதான் சரியான வழிமுறை ஆகும்.
கொரோனா வைரஸ் ஒருபோதும் மறையாமல் நம்மிடையே எப்போதும் தங்கிவிடக்கூடும். கொரோனா வைரஸுடன் வாழ்வது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.