தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. சில நாட்களாக கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியே பதிவாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் இன்று சென்னையில் 1,149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,298 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 528 பேர் மருத்துவமனைகளில் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17,527 ஆக உயர்ந்துள்ளது.