நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினமும் உச்சத்தை அடைந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இன்று மட்டும் சுமார் 1,927பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 19 பேர் இறந்ததையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 260 பேர் உயிரிழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்று 17,765 சோதனை மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் 1,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல கொரோனா தோற்று குணமாகி வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 1008 பேர் குணமடைந்து வீடு திரும்பிய்யுள்ளனர். இதுவரை, 19,333 பேர் குணமடைந்துள்ளனர்.