இந்தியா-சீனா இடையிலான உயர்மட்ட அளவிலான உடன்படிக்கையை சீனா மீறி விட்டதாக மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தனது எல்லைக்குள்ளேயே இந்தியா தனது செயல்பாட்டை மேற்கொண்டதாகவும், இந்தியாவை போலவே சீனாவும் செயல்படும் என நம்புவதாகவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், லடாக் எல்லை பகுதியில் இரு நாடுகளும் அமைதியை பேணுவது மிகவும் அவசியம் எனவும் லடாக் எல்லை நிலைமையை ஒருதலைபட்சமாக சீனா மாற்ற முயன்றதே பிரச்சினைக்கு காரணம் எனவும் வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.