ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன், 20வது நாளாக உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள தனது தாயுடன் வீடியோ காலில் பேச அனுமதிக்காத நிலையில், பெண்கள் சிறையில் உள்ள தனது மனைவி நளினியிடமாவது வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வருகிறார். சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முருகனுக்கு இதுவரை 6 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
ஜீவசமாதி அடைய தொடர் உண்ணாவிரதம் இருப்பதால் முருகனின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.