Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைஇலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

யாழ்ப்பாணம்

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (ஜூலை 5) முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை போலீஸார் அவரை கைது செய்தனர்.

2018 ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்ற பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதுடன், அவரை பருத்தித்துறை நீதிபதி இல்லத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

இதேநேரம் வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டனர். மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளில் ஒரு பிரிவினரான கரும்புலிகள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்த கைது சம்பவம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments