Thursday, January 2, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாகேரளா தங்க கடத்தல் வழக்கு - என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

கேரளா தங்க கடத்தல் வழக்கு – என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் புயலை கிளப்பிய ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஏஐ விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள அமீரகத்தின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்று சில பார்சல் வருவது விமானம் வழியாக வருவது வழக்கமாகும். மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடமாட்டார்கள்.. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்று வந்துள்ளார். ஆனால், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக புகார் எழுந்தது.

இதை தொடர்ந்து , சுங்கத்துறை அதிகாரிகள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பார்சல்களை சோதனை செய்ய சிறப்பு அனுமதி வாங்கினர். அதன்பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். இதனிடையே முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால்,அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதற்கிடையே கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வர் அலுவலகத்துக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்க கடத்தலுக்கு துணையாக உள்ளதாக குற்றம் சாட்டினார். தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதினார்

இதற்கிடையே, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டது இவருக்கு பதிலாக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், சிவசங்கர் ஐ.டி துறை செயலராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் நாட்டின் தேச பாதுகாப்புக்கு உறுவிளைவிக்கும் வகையில் நடந்துள்ள தங்க கடத்தல் வழக்கை தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்க கோரி முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments