இலங்கையில் கடந்த 5 ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி அதிக இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமர் பொறுப்பை ராஜபக்ச ஏற்றுள்ளார்.
கெலானியாவில் உள்ள ராஜமகா விகாரியா புத்த கோயிலில் நடைபெற்ற விழாவில் இலங்கையின் அதிபரும், தனது சகோதரருமான கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். 1970ம் ஆண்டில் அரசியலுக்கு வந்த ராஜபக்சே அரசியலில் தனது ஐம்பதாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளார்.
நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 5 லட்சம் வாக்குகள் பெற்று ராஜபக்சே வெற்றி பெற்றார். இதுவரை இரண்டு முறை இலங்கையின் அதிபராகவும், மூன்று முறை பிரதமராகவும் பதவி வகித்துள்ள ராஜபக்சே தற்போது நான்காவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.