தமிழகத்தில் ஒரே நாளில் 5,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முன்பைவிட கொரோனா தொற்று சற்று குறைந்திருந்தாலும், நாள்தோறும் பாதிப்பு கணிசமாக பதிவாகி வருகிறது. இன்று ஒரே நாளில் 5,976 பேருக்கு புதிகாக நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 92 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 7,608 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா சிகிச்சையிலும், தனிமை படுத்தப்பட்டும் 52,070 பேர் உள்ளனர்.