இந்தியாவில் அக்டோபர் மாதத்துக்கான ஊரடங்கு தளர்வில் மத்திய அரசு அக்டோபர் 15ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறக்கலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்தநிலையில் தற்போது திரையரங்குகளைத் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது மத்திய அரசு. திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் மத்திய அரசு, ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.
மேலும் 50% இருக்கையுடன்தான் தியைரங்குகள் செயல்பட வேண்டும். அடுத்தடுத்த இருக்கையில் அமர அனுமதி கிடையாது உள்ளிட்ட வழிமுறைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.