சென்னை
மத்திய தொல்லியல் துறையின் பட்டயபடிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய தொல்லியில் துறையின் பட்ட படிப்பில் சேர கல்வித்தகுதியாக தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும். பல மொழிகளின் 48 ஆயிரம் பழங்கால கல்வெட்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.
பண்டிட் தீனதயாள் பல்கலைகழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டயபடிப்பில் சேர்வதற்கு, சமஸ்கிருதம் பாலி, பிராகிருதி, பெர்சியன், அரபி மொழிகள் குறைந்த பட்ச தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலையின் முதுகலை தொல்லயில் துறை பட்டய படிப்பிற்கான குறைந்த பட்ச தகுதியில் தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும்.
2004 ஆம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் தற்போது புறக்கணிக்கப் பட்டு உள்ளது வேதனையளிக்கிறது. தமிழ்மொழியை சேர்ப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.