அமெரிக்க பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கி கவுரவுக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஒவ்வொரு துறைக்ககான நோபல் பரிசுகள் கடந்த 5 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் மிகப் புகழ்வாய்ந்த சமகால இலக்கியத்தில் முக்கியமானவராகக் கருதப்படும் லூயி க்ளுக் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். தெளிவான, எளிமையான, அழகான கவிதையின் மூலம் இந்தப் பிரபஞ்சத்தில் தனது இருப்பை லூயி வெளிப்படுத்தியுள்ளதாக நோபல் பரிசு கமிட்டி கூறியுள்ளது. 1993 ஆம் ஆண்டு புலிட்சர் விருதை வென்றுள்ள லூயிஸ், புனை கவிதைகள் உள்பட கட்டுரைகள் அடங்கிய 12 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பித்தக்கது.