மும்பை
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதில் தற்போது மாநிலத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் புதிதாக 7 ஆயிரத்து 539 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 25 ஆயிரத்து 197 ஆக உயர்ந்து உள்ளது. இதில் நேற்று மட்டும் 16 ஆயிரத்து 177 பேர் நோய் பாதிப்பில் இருந்து குணமாகி உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 14 லட்சத்து 31 ஆயிரத்து 856 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
இதேபோல மராட்டியத்தில் மேலும் 198 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதுவரை மாநிலத்தில் 42 ஆயிரத்து 831 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களில் 88.10 சதவீதம் பேர் குணமடைந்து உள்ளனர். 2.64 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 84 லட்சத்து 2 ஆயிரத்து 559 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 19.34 சதவீதம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலைநகர் மும்பையில் புதிதாக 1, 463 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நகரில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 332 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல மும்பையில் மேலும் 49 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர்.
தாராவியில் புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 459 ஆகி உள்ளது.