தெருவோர விற்பனையாளர்களுக்கு நிவாரண உதவி தான் தேவையே அன்றி கடனுதவி அல்ல என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில், உ.பி.யின் சில தெருவோர விற்பனையாளர்களுடன் பிரதமர் பேசுகிறார். முழு பொது முடக்கத்தில், தெருவோர விற்பனையாளர்கள் மற்றும் சிறிய கடைக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இன்று, தெருவோர விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகுப்பு தேவை, கடன் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.