காபூல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 19 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் காபூல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு இன்று மாலை திடீரென புகுந்த 3 தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குலை நடத்தியிருக்கிறார்கள். இதில் 19 பேர் உடல் சிதறி பலியாகினர், 22 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னதாக ஒருவர் மனித வெடிகுண்டை வெடித்த நிலையில் மற்ற இரணடு தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சண்டை போட்டு சுட்டு வீழ்த்தினர். இந்த சம்பவத்தால் ஆப்கானிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவத்தை நாங்கள் செய்யவில்லை என்று தாலிபான் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. எந்த அமைப்பும் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்கவில்லை.
முன்னதாக அக்., 24 ல் காபூலில் உள்ள ஒரு கல்வி மையத்தில் தற்கொலை படை நடத்திய தாக்குதலில் மாணவர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். இப்போது நடத்திருப்பது இரண்டாவது சம்பவம் ஆகும்.