Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபுதுச்சேரியில் ஒரே வருடத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்பை ஏற்படுத்தித் தருவோம் - குமரி...

புதுச்சேரியில் ஒரே வருடத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்பை ஏற்படுத்தித் தருவோம் – குமரி நம்பி, தேசிய துணைத்தலைவர், சமதா கட்சி.

புதுச்சேரி

புதுச்சேரி மாநில சமதா கட்சியின் நிர்வாக குழு கூட்டம் உழவர்கரையில் நடைபெற்றது.

புதுச்சேரி சமதா கட்சி மாநிலத் தலைவர் தினகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர்கள் ராஜகுரு, ஆன்றூஸ், மாநில துணைத்தலைவர் முருகன் இராமசாமி, பொருளாளர் செயின்ட் பால் ஆகியோர் முதன்மை வகித்தனர்.

இதில் அகில இந்திய துணைத் தலைவர் குமரி நம்பி, அகில இந்திய பொதுச் செயாலாளர் என்.ஏ.கோன் மற்றும் சமதா கட்சியின் தமிழ்நாடு முதன்மை பொதுச் செயலாளர் ஜவஹர் ஆனந்த், தமிழ் நாடு விவசாய அணி மாநிலத் தலைவர் செல்வ. வீரத்தமிழன், தமிழ்நாடு பொதுச் செயலாளர் இரா.கார்த்திக், மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் அனைத்து 30 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்பது அறிவிக்கப்பட்டது.

சமதா கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் குமரி நம்பி கூறியதாவது:

புதுச்சேரி முதலமைச்சரும், ஆளுநரும் மக்களுக்கு துரோகம் செய்கிறார்கள். அவர்கள் இருவரும் அரசு நிர்வாகத்துக்குள் அரசியல் செய்கிறார்கள். இதனால் புதுச்சேரி மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் அனைத்தும் தடைபடுகிறது. ஏற்கெனவே 4 ஆயிரம் பேர் வேலை இழந்து நிற்கும் நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 5 ஆயிரம் பேருக்கு வேலை கொடுப்போம் என்று பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார். அனால் சமதா கட்சியால் ஒரே வருடத்தில் 50 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க முடியும்.

பனை மரத்தின் மூலமாகவே நாங்கள் இந்த வேலைவாய்ப்பை வழங்குவோம். புதுச்சேரி அரசுக்கு தேவைப்பட்டால் எங்கள் ஆலோசனையை வழங்க தயார் என்று கூறினார் குமரி நம்பி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments