Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்"நிவர்" புயல் நிலவரம்

“நிவர்” புயல் நிலவரம்

நிவர் புயலானது தீவிர புயலாக மாறி கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 300கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கும் கிழக்கு-தென்கிழக்கே 310 கிமீ தொலைவிலும், சென்னை க்கு தென்கிழக்கே 370 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.இப்புயல் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் நகர்துள்ளது.

நிவர் இன்று மாலைக்குள் #மிக_தீவிர_புயலாக மாறி வடக்கு திசையில் நகர்ந்தி சென்னைக்கும் – புதுச்சேரிக்கும் இடையே மரக்காணம்/மகாபலிபுரம் அருகே இன்று பின்இரவு கரையை கடக்கும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இப்புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கிமீ வரை பலத்த சூறைக்காற்று வீசும், புயலின் மையப்பகுதியில் காற்றின் வேகம் 160கிமீ வரை செல்லலாம்.

அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், புதுச்சேரி,செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளுர், சென்னை மாவட்டங்களில் அதித கனமழையும், பலத்த சூறைக்காற்றும் விசும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் பகுதிகளான புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு,சென்னை ஆகிய மாவட்டங்களில் புயலின் அதிகபட்ச காற்றின் வேகமும், மழையும் பெய்யும் என்பதால் வடகோடி மாவட்ட மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வடகடலோர மாவட்டங்கள் மழையும், சூறைக்காற்றும் படிப்படியாக அதிகரிக்கும், அனைத்து இடங்களிலும் நாளை அதிகாலை வரை மிககனமழை முதல் அதித கனமழையும், பலத்த சூறைக்காற்றும் தொடர்ந்து வீசும்.

தாழ்வான பகுதியில், பாதுகாப்பில்லாத இடங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கையாக பாதுக்காப்பான இடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

டெல்டா பகுதிகள் #நாகப்பட்டினம், #காரைக்கால் #மயிலாடுதுறை மாவட்டங்களில் காற்று அச்சம் தேவையில்லை, தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். இன்று இரவு வரை டெல்டாவில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிதமான காற்றுடன் ( கண்டிப்பாக எந்த பாதிப்பும் ஏற்படாது) கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

காலை 10 மணி முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வானிலை அறிக்கை வெளியிடப்படும்.

இணைந்திருங்கள், எச்சரிக்கையாக இருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments