தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு பிறகு பல்வேறு தளர்வுகளுடன் சுமார் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள், விடுதிகள் திறக்கப்பட்டன.
நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணைய வழியில் நடத்தப்பட்டு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டுவருகின்றன. போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகக் கல்லூரிகளுக்கு வர முடியாத வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதியில் ஓர் அறையில் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதி. மாணவர்கள் முடிந்தவரை கல்லூரிகளுக்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். வாரத்தில் ஆறு நாட்கள் கல்லூரிகள் செயல்படும்.