சென்னை
சென்னை பூவிருந்தவல்லி அருகே தனியார் விடுதியில் கடந்த 9 ஆம் தேதி நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார்.
சித்ரா தற்கொலை விவகாரத்தில் ஹேம்நாத்தை கடந்த 6 நாட்களாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர். சித்ரா மரணம் குறித்து காவல்துறையினரும் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார்.