வட இந்திய மாநிலங்களில் கடும் குளிருடன் பனிமழை பொழிகிறது.
ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் பனிப்பொழிவால் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் கடும்குளிர் வாட்டுகிறது.
டெல்லியில் கடும் குளிருடன் பனிக்காற்று வீசுவதால் மக்கள் கம்பளிகளைப் போர்த்தியபடி தினசரி அலுவல்களை கவனிக்கின்றனர்.
மூடுபனியால் வாகனங்கள் எதிரே வருவோரை கவனிக்க முடியாமல் ஊர்ந்து செல்கின்றன.
வாகன ஓட்டுனர்கள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணத்தை மேற்கொள்கின்றனர்.