மீண்டும் தலைதூக்கும் கொரோனா அச்சத்தால் இந்தியா உள்பட 30 நாடுகள் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதித்துள்ளன. இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 31 வரை இங்கிலாந்து விமான சேவைகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதே போன்று பிரான்ஸ், ஜெர்மனி,நெதர்லாந்து ,ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, இஸ்ரேல், பெல்ஜியம், கனடா, பெரு உள்பட 30 நாடுகளால் விமானப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து உலக நாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட சூழல் உருவாகியுள்ளது.
எல்லைகள் மூடப்பட்ட சூழலை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் நல்லதொரு பலன் கிடைக்கும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.