காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் ஒரே நாளில் இருமுறை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மான்ககோட் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காலை தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலையும் அதே பகுதியில் தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிய ரக மோர்ட்டார் ரக குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.