ரயில்வே துறைக்கு சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த டிசம்பர் மாதத்தில் 11ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் சரக்கு ரயில்கள் வழக்கம் போல் இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மொத்தம் 11 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரம் டன் எடையிலான நிலக்கரி, இரும்புத்தாது, உணவு தானியங்கள், சிமெண்டு உள்ளிட்ட சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில்வேக்கு 11 ஆயிரத்து 788 கோடியே 11 லட்சம் வருவாய் கிடைத்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.