இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பை குறைந்த வீரர்கள், குறைந்த பார்வையாளர்களுடன் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
வங்கதேச உதயம் 50வது ஆண்டு விழாவும் கொண்டாடப்படுவதால் அணிவகுப்பில் வங்காள தேச வீரர்களும் கலந்துக் கொள்கின்றனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்பட உள்ளன. கலாசார நிகழ்ச்சிகளும் சுருக்கமாக முடித்துக் கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
அணிவகுப்பு தூரத்தை மூன்று கிலோ மீட்டராக குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.