ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக நிதித்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் மிகவும் உச்சத்தை எட்டியது. சுமார் ஒரு லட்சத்து பதினைந்தாயிரம் கோடி தொகை வசூலானதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதாக மத்திய நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்வோர் மீது மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதங்களில், போலியான பில்களைப் பயன்படுத்திய மற்றும் வரி ஏய்ப்பும் செய்த 185 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் நிதித்துறை செயலாளர் தெரிவித்தார்.