கொரோனா வைரசை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்தியில், உலகம் மிகக் கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும், அந்த எக்ஸ் எனப்படும் மர்ம நோய் கொரோனாவை விட மிக வேகமாகப் பரவுவதாகவும், எபோலாவை விட உயிர்க்கொல்லியாகவும் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித குலம், மிக விரைவில் இன்னும் பல மோசமான வைரஸ் தாக்குதல்களை சந்திக்கக் கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவின் மழைக்காடுகளிலிருந்து புதிய வைரஸ்கள் உருவாகி அது உலகம் முழுவதும் பரவும் என்றும் தெரிவித்துள்ளார்.