துபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி குவைத்தில் இருந்து மும்பை திரும்பினர்.
ஆனால் அதன் பின்னர் சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து வீடுகளுக்குச் சென்றதாகத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.