சென்னையை சேர்ந்தவர் அண்ணாமலை ராஜேந்திரன், 34, இவர் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் கரன்சி தாள்களை சேகரித்து வந்துள்ளார். இதனை இன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஹோட்டலில் காட்சிக்கு வைத்திருந்தார். அதில், 189 ஐ.நா. உறுப்பினர் நாடுகள், 27 தீவு மற்றும் வெளிநாட்டு பிரதேசங்கள் மற்றும் தற்போது இல்லாத அதாவது இரண்டாம் உலக போருக்கு பிறகு ஒன்றிணைக்கப்பட்ட நாடுகள் என 194 வழக்கற்றுப்போன நாடுகளை உள்ளடக்கிய 410 நாடுகளின் பணத்தாள்களை அவர் காட்சிப்படுத்தியுள்ளார்.
17 ஆம் நூற்றாண்டு முதல் தற்போது வரை உள்ள காகிதம், பாலிமர், அட்டை, தங்கம் மற்றும் துணி போன்ற பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட கரன்சி நோட்டுக்கள் அடங்கும்.
இதற்கு முன்பு மதுரையை சேர்ந்த
ஜெயேஷ் குமார் பாண்டியன் செய்த, 191 இருக்கும் ஐ.நா. நாடுகள், 161 வழக்கற்றதாக நாடுகள் மற்றும் 26 தீவு மற்றும் வெளிநாட்டு நிலப்பகுதிகள் உட்பட 378 வெவ்வேறு நாடுகளில் இருந்து நாணயங்கள் கொண்டிருந்தது சாதனையாக இருந்தது, இதனை தற்போது அண்ணாமலை முறியடித்துள்ளாதக ஆசிய புக் ஆப் ரெகார்ட்ஸ்-ன் நடுவர் விவேக் தெரிவித்தார்.