புதுச்சேரி
கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளோம். கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தை தீவிரப்படுத்தினோம்
புதுச்சேரி மாநில மக்களின் உரிமை காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த வெற்றி புதுச்சேரி மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி
பல கட்டப்போராட்டங்களை நடத்திய பின்பு எங்களின் கோரிக்கை நியாயமானது என்று மோடி அரசு நினைத்து தற்போது மாற்றியுள்ளது.
புதிய துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் தமிழிசை அரசியலைமைப்பு சட்டப்படி நடக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். யாராக இருந்தாலும் விதிகளையும் சட்டங்களையும் மீறக்கூடாது.
விதிமுறைகளை மீறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு களங்கம் விளைவிக்க நினைத்த கிரண்பேடிக்கு நல்ல பாடம் புகட்டப்பட்டுள்ளது. இது மாநில மக்களுக்கு கிடைத்த வெற்றி.
மதசாற்பற்ற கூட்டணி பலமான கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும்.
புதுச்சேரியில் கிரண்பேடியை பாஜக முதலமைச்சர் வேட்பாளராக முன் நிறுத்தினால் வரவேற்பேன் என்று கூறியுள்ளார் நாராயணசாமி.