கல்பாக்கம் அருகே கடற்கரையில் மிகப்பெரிய டால்பின் இறந்த நிலையில் இன்று காலை கரையொதுங்கியது.வனத்துறையினா் டால்பினை கடற்கரையோரம் புதைத்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள உய்யாலி குப்பம் மீனவா் குடியிருப்பு கடற்கரை பகுயில் இன்று காலை 9 மணியளவில் ஒரு டால்பின் இறந்த நிலையில் கரையொதுங்கி கிடந்தது.மீனவா்கள் கல்பாக்கம் போலீசுக்கு தகவல் கொடுத்தனா்.போலீசாா் வந்து பாாத்துவிட்டு வனத்துறையினருக்கு தெரிவித்தனா்.
செங்கல்பட்டு வனத்துறை ரேஞ்சா் D.பாண்டுரங்கன் தலைமையில் வனத்துறையினா் வந்து ஆய்வு செய்தனா்.அது சுமாா் 350 கிலோ எடையுடையது.3 மீட்டா் நீளமும் 2.5 மீட்டா் சுற்றளவும் உடையது.அதன் வயது சுமாா் 3 .
இதையடுத்து வனத்துறை மருத்துவா் கடற்கரைக்ககே வந்து டால்பினை பிரேத பரிசோதனை செய்தாா்.அதன்பின்பு நடுக்கடலில் கப்பலில் அடிப்பட்டு இந்த டால்பின் உயிரிழந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவித்தாா்.
அதன்பின்பு உள்ளூா் மீனவா்கள் உதவியுடன் எா்த்முவா் மூலம் கடற்கறையோரம் மிகப்பெரிய பள்ளம் தோண்டி உயிரிழந்த டால்பின் உடலை புதைத்தனா்.