லாக்டவுன் சலுகைகளாக தமிழக அரசு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விபரங்கள் வருமாறு:
சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்.
கடன் உதவி பெறும் போது செலுத்த வேண்டிய முத்திரை தாள் பதிவு கட்டணம் கால அவகாசம் நீட்டிப்பு.
சிட்கோ மனைகள் fasttrack அடிப்படையில் தொடர்ந்து ஓதுக்கீடு.
ஆட்டோ ரிக்சா, கால்டாக்ஸி EMI கால அவகாசம் நீட்டிப்பு குறித்து ரிசர்வ் வங்கியிடம் வலியுறுத்தப்படும்.
ஆட்டோ ரிக்சா, கால்டாக்ஸி சாலை வரி கட்டணம் செலுத்த 3 மாதம் கால அவகாசம்.
கொரோனா விதிகளை கடைபிடித்து பழ கடைகளில் வியாபாரம் செய்ய அனுமதி.
காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணிவரை இயங்க அனுமதி.
மற்ற மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளும் செயல்பட அனுமதி.
தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருநாள் மட்டும் அனுமதி.