காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
கொரோனா தொற்று என்றால் என்ன என்பதே மத்திய அரசுக்கும் மோடிக்கும் புரியவில்லை. கொரோனாவை புரிந்து கொள்ள மத்திய அரசு தவறிவிட்டது.
பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளர் போல செயல்படுகிறார். கொரோனா 2-வது அலை தாக்கும் என்று பலமுறை நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன். நான் எச்சரிக்கை விடுத்த போது என்னை ஏளனம் செய்தார்கள்.
கொரோனாவை வீழ்த்தி விட்டதாக பிரதமர் மோடி மேடைகளில் பேசினார். மோடி காட்டிய “வித்தைகள்” காரணமாகவே இரண்டாம் அலை ஏற்பட்டது.
இந்தியாவில் காட்டப்படும் கொரோனா பலி எண்ணிக்கை பொய். மத்திய அரசு உண்மையான எண்ணிக்கையை மறைத்துவிட்டது.
கொரோனா என்பது தொடர்ந்து உருமாற கூடிய வைரஸ். லாக்டவுன் தற்காலிக தீர்வு, வேக்சின் மட்டுமே நிரந்தர தீர்வு என்று கூறியுள்ளார்.