சென்னை
ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான அரியானா கொள்ளையன் விரேந்தர் ராவத் சென்னை அழைத்து வரப்பட்டான்.
தமிழ்நாட்டில் 21 எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் ஹரியானா கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர் என்று சென்னை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 15, கிருஷ்ணகிரி 3, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா ஒரு ஏடிஎம்களில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.