Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்அவசரகதியில் அறிக்கை வேண்டாம் எடப்பாடிக்கு எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேண்டுகோள்

அவசரகதியில் அறிக்கை வேண்டாம் எடப்பாடிக்கு எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேண்டுகோள்

சென்னை

வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மை நிலைமை அறியாமலேயே ”டெல்டா விவசாயிகளுக்கு தரமான நெல்லை வழங்குக” என்ற தலைப்பின்கீழ் விதைநெல் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். விவசாயி கே.வீரமணி தனக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்காக 7 ஏக்கர் பரப்பிற்குத் தனியாரிடமிருந்தும், மீதமுள்ள இரண்டு ஏக்கருக்கு செந்தலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்தும் விதைநெல்லை வாங்கி விதைத்ததாகவும், விதைத்து 12 நாட்களாகியும் அரசு வழங்கிய விதை நெல்கள் முளைக்கவில்லை என்றும் விவசாயி வேதனை தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறியுள்ளார்.

விவசாயி என்று தன்னை தம்பட்டம் அடித்துக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஒரு தரமான விதைநெல் உற்பத்தி செய்வதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று கூட தெரியாமல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். விவசாயி கே. வீரமணி வாங்கப்பட்ட விதைநெல்லானது முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்காக இவ்விதைக் குவியல் திருவையாறு வேளாண்மை விரிவாக்க மையத்தின் கிடங்குகளுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விதைத்து 12 நாட்களாகியும் முளைக்கவில்லை என்று குறிப்பிடும் எதிர்க்கட்சித் தலைவர், இந்த விவரங்களை எல்லாம் அறியாமல் அறிக்கையை அவசரகதியில் வெளியிட்டுள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற 56 நாட்களுக்குள் டெல்டா பகுதிகளிலுள்ள விதை, உரம் விநியோகம் செய்யும் தனியார் மற்றும் அரசு விதை விநியோகம் செய்யும் இடங்களில் ஆய்வுகளை அதிகப்படுத்தி, விதை மற்றும் உர மாதிரிகளை எடுத்து, தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ரூ.61 கோடியே 9 இலட்சத்து 25 ஆயிரத்திற்கு சிறப்பு குறுவை தொகுப்புத் திட்டத்தை விவசாயிகளின் நலன்களுக்காக முதல்வர் அறிவித்துள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில்தான் நடைபெற்றது என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அவர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குளறுபடிகளுக்கு பொறுப்பேற்க வேண்டியதும் எடப்பாடி பழனிசாமி தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments