Friday, December 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமா52 வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 - 28 வரை நடைபெறுகிறது

52 வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 – 28 வரை நடைபெறுகிறது

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழா, சுற்றுலா தலமான கோவாவில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி முடிவடையும்.

ஆனால், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடக்க வேண்டிய விழா, இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில்தான் நடத்த முடிந்தது. இந்த ஆண்டுக்கான 52ஆவது சர்வதேச திரைப்பட விழா வருகிற நவம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை வழக்கம் போன்று நடைபெறும் என்று இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொள்ள விரும்பும் படங்கள் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரபல இயக்குநர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. உலகம் முழுவதும் இருந்து சுமார் 180 நாடுகளில் இருந்து 250 படங்கள் வரை இந்த விழாவில் திரையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments