டெல்லி
காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு அனுமதி தரக்கூடாது என்று டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்திடம் தமிழக அனைத்துக்கட்சி குழு வலியுறுத்தியுள்ளது.
மேகதாது அணைக்காக பிரதமரை கர்நாடக முதல்வர் எடியூரப்பா மாலையில் சந்திக்கும் நிலையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை கஜேந்திரசிங் செகாவத்திடம் குழு வழங்கியது. மேகதாது அணையை கர்நாடகா கட்டினால் தமிழகத்தின் நீராதாரம் பாதிக்கப்படும் எனவும் குழு வலியுறுத்தியுள்ளது.