இயக்குனர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2011-ல் வெளியான அவன் இவன் திரைப்படத்தில் ஜமீன்தாரை இழிவுபடுத்திய காட்சி வைத்தது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர் கார்த்திகேயன் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி இயக்குனர் பாலாவை வழக்கில் இருந்து விடுவித்தார்.