சென்னை
தமிழகத்தில் தனிநபர் கட்டுப்பாட்டில் யானைகளை வைத்திருக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் யானைகள் பராமரிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கோயில் யானைகள், வளர்ப்பு யானைகள் பற்றி அறிக்கை தர அரசுக்கு அக்டோபர் வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. கோயில்களின் கட்டுப்பாட்டில் 32 யானைகளும், தனியார் கட்டுப்பாட்டில் 31 யானைகளும் உள்ளன என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.