திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களின் போராட்டம் இன்றுடன் 45வது நாளை எட்டியுள்ளது.
காலம் தாண்டியும் தங்களை சிறப்பு முகாமில் வைத்திருப்பதை கண்டித்து அவர்கள் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள்.
தங்கள் போராட்டத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டு, தமிழக முதலமைச்சர் நல்ல தீர்வினை தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.