Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் சுகாதார பாதுகாப்பு முறைகள் மிகவும் மோசமாக பாதிப்படையும் - ஏ.கே.ராஜன்...

நீட் தேர்வு தொடர்ந்தால் தமிழ்நாட்டில் சுகாதார பாதுகாப்பு முறைகள் மிகவும் மோசமாக பாதிப்படையும் – ஏ.கே.ராஜன் குழு

நீட் தேர்வு மேலும் தொடர்ந்தால் தமிழ்நாட்டில் சுகாதார பாதுகாப்பு முறைகள் மிகவும் மோசமாக பாதிப்படையும் – ஏ.கே.ராஜன் குழு அறிக்கையில் தகவல

இந்தியா முழுவதும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் நீட் என்ற தேசிய தகுதி மற்றும் நுழை வுத்தேர்வை ஒன்றிய அரசு அறி முகம் செய்தது. இந்த தேர்வுக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

நீட் தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தினால் தமிழ் நாட்டில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? என்பதை ஆய்வு செய்து தமிழ்நாடு அரசிற்கு பரிந்துரைப்ப தற்காக சென்னை உயர்நீதிமன்றத் தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழுவை தமிழ்நாடு அரசு நியமித்தது.

இந்த குழு பல ஆவணங்கள் அடிப்படையில் ஆய்வுகளை மேற் கொண்டு கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படை யில் நீட் தேர்வை எதிர்த்து சட்டம் இயற்ற தமிழ்நாடு அரசு முன்வந்தது.

அதுதொடர்பான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு ஏன் தேவையில்லை? என்பதற்கான காரணம், நீதிபதி ஏ.கே.ராஜன் கொடுத்த அறிக்கையில் எடுத்துக்காட்டப் பட்டு இருந்தது.

அந்த சட்டமசோதா, சட்ட மன்றத்தில் ஏகமனதாக நிறைவேற் றப்பட்டு தமிழ்நாடு ஆளுநரின் ஒப் புதலைப்பெற அனுப்பப்பட்டு உள்ளது. ஆளுநரின் ஒப்புதலையோ அல்லது தேவைப்பட்டால் குடியர சுத் தலைவரின் ஒப்புதலையோ பெற்றால் மட்டுமே அந்த சட்ட மசோதா சட்டமாக மாற்றப்படும்.

இந்த நிலையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர் மட்ட குழு அளித்த 165 பக்கங்களை கொண்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதன் முடிவுரையில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டில் நீட் தேர்வு மேலும் சில ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் இங்குள்ள சுகாதார பாதுகாப்பு முறைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுவிடும். பல்வேறு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் நியமிக்கப்படுவதற்கு போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள்.

அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்படுவதற்கு போதுமான அளவில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இருக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும். ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு மருத்துவக்கல்வியில் சேர வாய்ப்பு இல்லாமலேயே ஆகிவிடும்.

மொத்தத்தில், சுதந்திரத்திற்கு முன்பு தேவைப்பட்ட சிறு நகரங் கள், கிராமங்களுக்கு மருத்துவர்கள் நடந்து சென்று மருத்துவம் பார்த் தது போன்ற நிலை தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுவிடும். அதோடு, மருத்து வம் மற்றும் சுகாதார பாதுகாப்பு முறைகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு மிகவும் பின்தங்கி விடும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments