உளுந்து மற்றும் பச்சைப்பயிறு விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்யும்.
நடப்பாண்டில் 4,000 மெட்ரிக் டன் உளுந்தும், 3,367 மெட்ரிக் டன் பச்சைபயிறும் கொள்முதல் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உளுந்துக்கு கிலோ ரூ.63-ம், பச்சை பயிறுக்கு ரூ.72.75-ம் குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.