அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து உலக அழகியாக (Miss Universe 2021) தேர்வாகியுள்ளார். இதன் மூலம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2017ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும், 2019ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும், 2021ல் உலக அழகி பட்டத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.