Friday, July 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாவிமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து - முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்?

விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து – முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்?

டெல்லி

இந்திய ராணுவத்தில் அதிகாரப்பூர்வமாக முதல் முறையாக முப்படைகளின் தலைமை தளபதியாக 2019-ல் பதவி ஏற்றவர் பிபின் ராவத்.

தமிழகத்தின் நீலகிரியில் இன்று விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் விபத்தில் நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி உட்பட 14 பேர் பயணித்தனர்.

ஹெலிகாப்டரில் பயணித்த 14 பேரில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.3 பேர் குன்னூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தோருக்கு சிகிச்சையளிக்க கோவையில் இருந்து மருத்துவக் குழு சென்றுள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள் அடையாளம் காண முடியாத அளவில் உள்ளதாக தகவல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானப்படை தளபதி சவுத்ரி ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு செல்ல உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments