மும்பை வீரர் இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
இலங்கை ஆல் ரவுண்டர் வனிந்து ஹசரங்கா 10.75 கோடி ரூபாய்க்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்திய வீரர் அம்பதி ராயுடு 6.75 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டார்.
மும்பை அணியின் ஆல் ரவுண்டர் குர்னல் பாண்டியா, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் 8.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் 6.50 கோடி ரூபாய்க்கு டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடி ரூபாய்க்கு சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை 5.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.
இந்திய விக்கெட் கீப்பர் ரித்திமான் சஹா ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.
ஆஸ்திரேலியா விக்கெட் கீப்பர் மேத்திவ் வேட் ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் முகமது நபி ஏலம் எடுக்கப்படாமல் விடப்பட்டார்.