Wednesday, April 24, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,910 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 19 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இது சற்று குறைந்தது. 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 809 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5 ஆயிரத்து 910 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,62,445 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,007 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 7,034 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,38,80,464 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 53,974 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 2,13,52,74,945 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 32,31,895 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 2,27,313 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 88,73,79,274 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments