தமிழ்நாட்டில் சிறு வியாபாரிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் 2 கிலோ மற்றும் 5 கிலோ எடையுள்ள இலகு ரக சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பெரியசாமி இன்று (6ம் தேதி) தொடங்கி வைத்தார்.
முன்னா மற்றும் சோட்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த சிலிண்டர்களை கூட்டுறவு துறை சார்பில் நடத்தப்படும் நியாயவிலை கடை, பல்பொருள் அங்காடிகளில் விற்க அரசு முடிவு செய்துள்ளது.