மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர் ஹிட்டான ‘லூசிஃபர்’ படம், தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ‘காட்பாதர்’ என்ற பெயரில் ரீமேக் ஆனது.
இப்படம் நேற்று (அக்டோபர் 5) திரைக்கு வந்தது. படத்திற்கு நேற்றே நல்ல விமர்சனங்கள் வர ஆரம்பித்தது. ஆனால், முதல் நாள் வசூல் எதிர்பார்த்த அளவு இல்லை என திரைத்துறை தரப்பில் தெரிவிக்கின்றன. இப்படம் உலக அளவில் ₹38 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது.