ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கான பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதாவது:
“ஒன்றிய அரசின் முடிவு கண்டிக்கத்தக்கது. இந்திய ஒன்றியத்தின் இறையாண்மை, அதன் பன்மைத்துவத்தில் உள்ளது. அனைத்திலும் ஒற்றைத்துவத்தை புகுத்திட நினைப்பது ஜனநாயகப் படுகொலை” என தெரிவித்தார்.